ad exchange

Monday, February 7, 2011

How to conceive quickly?

 சீக்கிரம் அப்பா / அம்மா ஆகுங்க....

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?
உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.
முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?
உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.
2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.
3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம்.
உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள்.

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?
உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் புண்டையை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொள்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.
எந்த முறையில் உடலுறவு கொண்டால், கருப்பிடிக்க ஏதுவானது என்று பல முறை கேள்விகள் வந்துள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட முறையில் உடலுறவு கொண்டால், கருப்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதற்கான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. வழக்கமான உடலுறவு நிலை, அதாவது, ஆண் மேலே படுத்து பெண் கீழே படுத்து உடல் உறவு கொண்டாலே போதுமானது.
பின்குறிப்பு: கர்ப்பம் தரிப்பது சற்று பயமாக இருக்கலாம், ஆனால் கர்ப்ப காலம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயம். இங்கே தரப்பட்டுள்ள பட்டியலையும், நாள்காட்டியையும் உபயோகித்து உங்கள் மாதவிடாயையும், முட்டை வெளியீட்டையும் கணக்கெடுத்து கொள்ளுங்கள். கருத்தடை சாதனங்களை நீங்கள் உபயோகப் படுத்தினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். கருத்தடை மாத்திரைகளோ, அல்லது காப்பர் டி (Copper-T) போன்றவை உபயோகித்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி எவ்வளவு naaL கழித்து கருப்பிடிக்கலாம் என்று கலந்து ஆலோசியுங்கள். அதே போல மேலே சொன்ன சாதனங்களை நிறுத்திய பிறகு, உங்களுக்கு சீரான மாதவிடாய் வரும் வரை காத்திருந்து, பின் கருத்தரிக்க முயலுங்கள்.

No comments:

Post a Comment